Homeமுகப்புசெங்கோல்

செங்கோல்

The Mace (Senkolaya)

பிரிட்டனின் பரிபாலன முறை வழி வந்த செங்கோல் என்பது ஜனனாயக பாரளுமன்ற முறையில் முக்கியமானதொரு சின்னமாகும். இது அரசியலில் பங்கு வகிக்கும் மக்களைப் பிரதிபலிக்கிறது. பிரதேச வாரியாக மக்களால் தெரிவூ செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக செங்கோல் வைக்கப்படுகிறது. 1949 இல் பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கைக்கு முதல் செங்கோல் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

மத்திய மாகாண சபையின் செங்கோலும் பெரும்பாலும் இந்த அடிப்படையினைக் கொண்டதாகும். மலைநாட்டின் உயர்ந்த சிற்ப வேலைப்பாடுகளுக்குச் சான்று பகரும் இச்செங்கோலானது உயர் ரக மகோகனி மரத்தினால் செய்யப்பட்டதாகும். இதன் தடித்த பகுதி பெரும்பான்மை இனத்தினையூம் நீண்ட மெல்லிய பகுதி சிறுபான்மையினரையூம் குறிக்கின்றது. செங்கோல் மாகாண சபை நடவடிக்கைகளின் தன்மையைப் பொறுத்து உயர்ந்த அல்லது தாழ்ந்த இடத்தில் வைக்கப்படும்.

மத்திய மாகாணத்தின் செங்கோலின் தலைப்பகுதி குடத்தின் வடிவில் ஆக்கப்பட்டு அதில் விரிந்த நிலையிலுள்ள தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது. தேசத்தினைக் குறிக்கும் வகையில் இரண்டு சிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சபையின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதற்காக செங்கோலின் அடிப்பகுதியில் சூரியனும் சந்திரனும் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இது ஆக்கப்பட்டுள்ள விதத்தினை நோக்கும் போது இன்னும் அதிகமான வேலைப்பாடுகளைச் செதுக்க இடமிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 62 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

496795
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
306
663
5316
4325
15673
15969
496795

உங்கள் IP: 54.166.250.213
Server Time: 2017-06-25 13:54:42
Joomla templates by Joomlashine