Homeமுகப்புHistory of the Kandyan Kingdom

மத்திய மாகாணத்தின் சுருக்கமான ஒரு வரலாறு

Old map of Kandyan Kingdomஇலங்கை வரலாற்றில் ஒரு கேந்திரமான இடத்தினை மத்திய மாகாணத்தின் வரலாறு பிடித்திருக்கிறது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே மத்திய மாகாணத்தின் வரலாறு தொடங்குவதற்கான ஆதாரங்கள் உள்ளன. பரம்பரையாக வழிவரும் கதைகளை ஆதாரமாகக் கொண்டு மத்திய மாகாணத்தின் வரலாறு இராவணண் காலத்திலேயே ஆரம்பித்துள்ளதாக வரலாற்றாசிரியர்கள் சிலர் வாதிடுகின்றனர். அக்காலத்தில் ‘மாலய ரட’ என அழைக்கப்பட்ட மத்திய மலைநாட்டில் ஆரம்பகாலத்தில் யக்ஷஇ நாகஇ மற்றும் ரக்ஷ எனப்படும் மூன்று வேறுபட்ட குலத்தவர்கள் வாழ்ந்தனர். மாகாவம்சத்தின் படி இக்குலத்தவர்கள் குவேனியின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர்: பம்பரகலைஇ ஹாரகமைஇ துhல்வெலைஇ வெகிரியைஇ மொலகொடஇ யஹ்லெனஇ கலபவ ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இதற்கு மேலும் சான்று பகர்கின்றன.

 

அநுராதபுர ராஜதானி காலத்தில் கண்டி உட்பட மத்திய மாகாணமானது பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. மலைநாடு என்ற பொருள்படும் வகையில் அமைந்த ‘மலாய தேசய’இ மலாய மண்டலய’இ ‘மலாய ரட’ மற்றும் ‘மலாய நாடு’ என்பவை இவற்றில் முக்கியமானவையாகும். அநுராதபுர காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் மலைநாடானது உத்தர தேசய மற்றும் ரோஹனய என இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. உத்தர ரட அல்லது மேல் நாடு என அழைக்கப்பட்ட பகுதியானது ரோஹனய என்ற மற்றப் பகுதியூடன் நெருக்கமாகவே காணப்பட்டது.

 

kandyan kingdom flagஇதன் பிற்பட்ட காலத்தில் இலங்கை ரஜரடஇ தக்கின தேசம்இ ரோஹன தேசம் மற்றும் மலைநாடு எனப் பிரிக்கபட்டது. மகாவலி கங்கை மலைநாட்டினை ஏனைய பகுதிகளிலிருந்து பிரித்துக் காட்டும் அம்சமாக திகழ்கிறது. அத்துடன் அநுராதபுர காலத்தில் உத்தர தேசம் நாட்டின் நிர்வாகத்தினை நடத்தும் பிரிவாகக் காணப்பட்டதுஇ பின்னர் முதலாம் பராக்கிரமபாகு அரசனின் காலத்தில் உத்தர தேசமும் தக்கின் தேசமும் இணைக்கப்பட்டு அவை ஒருங்கே ‘மலாய’ என அழைக்கப்பட்டன.

 

king rajasinha iiகி.பி 06 தொடக்கம் 11 ஆம் நுhற்றாண்டு வரையில் மலையக தேசமானது மலாய ராஜாவினால் ஆளப்பட்டு வந்த போதும் அது அநுராதபுர மற்றும் பொலனறுவை ராதஜதானிகளின் ஆளுகைக்குட்பட்டதாக இருந்து வந்தது. ஆயின் தென் கிழக்கை நோக்கி ராஜதானி நகர்ந்த போது மலையகத்தின் தனித்ததுவமான தோற்றம் மெல்ல மெல்ல ஆரம்பித்தது. பொலனறுவை யூகத்தின் முடிவிற்குப் பிறகு மலையக்த்தினை நோக்கி படையெடுக்க ஆரம்பித்ததனால் அதன் மக்கள் தொகை; பெருக ஆரம்பித்தது. 14 ஆம் நுhற்றாண்டில் நான்காம் புவனேகபாகு மன்னனினால் இலங்கையின் ராஜதானி கம்பொளைக்கு மாற்றப்பட்ட போது மலையகம் இலங்கையின் தலைமையகமாகக் கட்டியெழுப்பப்பட்டது. மலையகத்தின் இயற்கை வளமும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பினை வழங்கும் கேந்திர நிலையமாக அது அமைந்திருந்ததுமே இதற்குக் காரணமாகும். இதன் பிறகு ஆண்ட பல்வேறு அரசர்களும் புத்த பகவானின் புனித சின்னங்களை மலையக்த்தில் பாதுகாத்து வைப்பது உட்பட பல்வேறு சேவைகளைச் செய்தனர். சேனாசம்பத விக்கரமபாகு மன்னன் கி.பி 1480 ஆம் ஆண்டில் செங்கடகலை என்ற நகரை இஸ்தாபித்து அதனை தனது தலைநகராக ஆக்கிக் கொண்டான்.

 

கி.பி 1500 ஆம் ஆண்டளவில் போர்;துக்கீசர்களின் வருகையைத் தொடர்ந்து மலையக மக்களின் பங்களிப்புடனான நாட்டின் உரிமையை வேண்டிய கலகங்களை அவதானிக்க முடிகிறது. இக்காலப்பகுதியில் மலைநாடானது உடுநுவரஇ யடிநுவரஇ தும்பரஇ ஹாரிஸ்பத்துவ மற்றும் ஹேவாஹெட எனப்பட்ட பெரிய நகரங்களைக் கொண்டிருந்தது. அத்துடன் மாத்தளைஇ ஊவாஇ கொத்மலைஇ சேத் கோரல சரத் கோரலஇ துன் கோரல மற்றும் சபரகமுவ ஆகியவை மலைநாட்டிற்கு உரித்தான நகரங்களாகக் காணப்பட்டன.

 

king Vimaladharmasuriya Iஆயினும் இக்காலத்தின் இலங்கையின் முக்கிய நகரமாகத் திகழ்ந்தது கோட்டையாகும். கி.பி 1521 அளவில் அரசியல் கலவரத்தினால் தோற்றம் பெற்ற சீதாவக்கை இராஜதானியினை 1582 இல் செங்கடகலை வெற்றி கொண்டது. அத்தருணத்தில் மலைநாட்டினையூம் வடக்கின் தமிழ்ப் பகுதிகளையூம் தவிர ஏனைய பகுதிகள் சீதாவக்கையின் ஆளுகைக்கு உட்பட்டதாகவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வெற்றியினைத் தொடர்ந்து மலைநாட்டின் எல்லைகளும் மாற்றம் பெறத் தொடங்கின.

 

1592 இல் டொன் ஜூவான் அல்லது கொனப்ப பண்டார போர்துக்கீயரை துன்தர போரில் வெற்றிக் கொண்டு விமல்தர்மசூரிய என்ற பெயரில் அரசனானான்இ டோனா கெதெரினாவைத் தனது பட்டத்து ராணியாக்கிக் கொண்டான். இத்துடன் மலையக் ராச்சியம் கோட்டை மற்றும் சீதாவக்கை ராச்சியங்களிலிருந்து பிரிந்து தனித்துவ இராச்சிமாக மாறியது. விமலதர்மசூரிய மன்னன் மத்திய மலைநாட்டினை புத்த சாசனத்தின் கேந்திர நிலையமாக மாற்றியமைத்தான். இவ்வாறே 1593-1815 வரை கண்டி அல்லது மலையக இராச்சியம் இருந்து வந்நது. இக்காலப்பகுதியில் மலையகத்தினை ஆண்ட மன்னர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.

 

அரசன் ஆட்சி
முதலாம் விமலதர்மசூரிய 1590 - 1604
செனரத் 1604 - 1635
இரண்டாம் இராஜசிங்க 1635 - 1687
இரண்டாம் விமலதர்மசூரிய 1687 - 1707
வீரபராக்கிரம நரேந்திரசிங்க 1707 - 1739
விஜய ராஜசிங்க 1739 - 1747
கீர்த்தி சிறி ராஜசிங்க 1747 - 1782
ராஜாதி ராஜசிங்க 1782 - 1798
சிறி விக்கிரம் ராஜசிங்க 1798 - 1815

king sri vikrama rajasinhaமலைநாட்டின் ஆளுந்தரப்பினருடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர் 1815 இல் கண்டியினை சம்பூர்ணமாகக் கைப்பற்றினர். ஆயினும் இந்த உடன்படிக்கைக்கு முற்பட்ட காலத்தில் மலைநாட்டு ஆட்சியாளர்கள் தந்துர மற்றும் கன்னொருவ போர்களில்  வெற்றியீட்டியிருந்தனர். கண்டி உட்பட மலையகம் கைப்பற்றபட்ட பின்னர் ஆங்கிலேயருக்கு எதிரான முதலாவது கலவரமாக வாரியபொல சிறி சுமங்கல தேரரினால் முன்னெடுக்கப்பட்ட கலவரத்தினைக் கூறலாம்.

 

kandyan convention (Udarata Givisuma)கண்டி அடிபணிந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட சுமார் 03 ஆண்டுகளின் பின்னர் ஆங்கிலேயருக்கு எதிரான பாரிய எதிர்ப்புப் போராட்டம் வெல்லஸ்ஸவிலிருந்து வெடித்தது. மொனராவில கெப்பட்டிப்பொலஇ ஹங்குராங்கெதஇ டிங்கிரியஇ கொஹூகும்புர ரேட்ரால போன்ற பல்வேறு தலைவர்களினால் இது முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டமானது ஆங்கிலேயரினால் முறையடிக்கப்பட்ட போதிலும் மலையக மக்களின் போராடும் பலம் சற்றும் குறையவிலலை. இரண்டாவது சுதந்திரப் போரட்டமாக 1848 இல் மாத்தiயிலிருந்து புரன் அப்புவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பிரித்தானியரை பெரிய நெருக்கடியில் தள்ளியது. 1948 இல் இலங்கை சுதந்திரமடையூம் காலம் வரை சுதந்திரத்திற்காகவூம் உரிமைக்காக மத்திய மலைநாடு பாடுபட்டு வந்தது என்பது தௌpவாகிறது.

 

 

 

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 8 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

464191
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
401
414
3911
3766
13578
31135
464191

உங்கள் IP: 54.225.15.88
Server Time: 2017-04-29 19:17:21
Joomla templates by Joomlashine